September 01, 2010

நான் மகான் அல்ல?

4 comments:


என்னை இப்படம் பார்க்கத் தூண்டிய காரணங்கள்  காரணம்:

வெண்ணிலா கபடிக் குழு (இயக்குனர் என்று சொல்லவும் வேண்டுமா?)

படத்தின் சிறப்பம்சம்:
1. திரைக்கதை,
2. ஒவ்வொரு காட்சியிலும் மறைந்திருக்கும் குட்டிக் கதைகள்,
3. நான்கு மனம் பிறழ்ந்த மாணவர்களின்  தேர்வு,
4. கதையின் ஊடே கடந்து செல்லும் மெல்லிய நகைச்சுவை,
5. கதாபத்திரங்கள்,
6. வசனம்.
7. அப்பா-மகன்-அம்மா பழகும் விதம்...

  இது போதுங்க... இன்னமும் வரிசைபடுத்தனும்னா மொத்த கதையையும் சொல்லணும். அதனால அடுத்தத பாப்போம்.

படத்துல இசை எப்படி?

யுவன் ஷங்கர் ராஜா..

பாடல்களில் இப்போதும் மனதில் இருப்பது... "நிலவை பிடிச்சி தரவா" பாடல். குடும்ப குதூகலத்தை இசையிலும், காட்சியிலும் சொன்ன பாடல்,

அப்பா சோகப் பாடல்... காட்சிபடுத்தியிருந்த விதம் மிகவும் பாதித்தது.

பின்னணி இசை... ரகளை.. அதுவும் அந்த வில்லன்களை காட்டும்போது, அவர்களின் குரூரப் பார்வையுடன், பின்னணி இசையும் சேர்ந்து காட்சியின் தீவிரத்தை கூட்டுகிறது...

குத்து வசனம்????

இங்கதாங்க இயக்குனர் (வசனகர்த்தாவும்) தப்பு பண்ணிட்டார்... குத்து வசனம் வைக்க எவ்வளவு நல்ல கதை... ஆனால் எங்கேயும் ஒரு கூடுதல் வசனம் கூட இல்லை.

கொறைஞ்சது ஒரு காட்சியில், "அப்பாவை கொன்னவனை ஏன்டா போலீஸ்-ல சொல்லல?" அப்படின்னு நண்பன் கேக்கும்போது... நம்ம நாயகன் என்ன பேசியிருக்கனும்... "போலீஸ்-ல சொல்லிட்டு கோர்ட் தண்டனை வாங்கி கொடுக்க நான் பனிமலை இல்லைடா... எரிமலை..." அப்படின்னாவது பேசியிருக்க வேண்டாம்? ம்ஹூம்.
சரி... எரிமலை வேண்டாங்க... பரங்கிமலைனாவது  சொல்லியிருக்கலாம்ங்க...
(ஐயோ! எனக்கு என்னாச்சு... அப்பவே வீட்ல சொன்னங்க.. விஜய் படமும் அஜித் படமும் மாத்தி மாத்திப் பாக்கதடா... எதாச்சும் ஆகிடும்னு... உண்மையில எதோ ஆகிடுச்சி போலிருக்கே!!! இல்லனா குத்து வசனம் இல்லன்னு இப்படி வருத்தப்படுவனா?)

அடிதடி? (சண்டைகாட்சிக்குதான் இப்படி பேர் வெச்சிருக்கேன். நல்லாயிருக்கா?)

கலவர காட்சி மிகவும் இயல்பாக உருவாக்கப் பட்டுள்ளது,
இறுதி சண்டை மிகவும் நீளம் என்றாலும், ஒருவன் நாலு பேரை சமாளிக்கும்போது இவ்வளவு நேரம் போராட வேண்டியிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த சண்டைக் காட்சியில்தான் ஹீரோ கார்த்தி தெரிகிறார்... அதற்கு முன்பு வரை அவர் நம்மில் ஒருவராகத்தான் படம் நெடுக வருகிறார்...

நாயகி?
காஜல் அகர்வால் இருக்கிறார்...அவ்வளவுதான்... ஒரே ஆறுதல்.. முழுக்க உடுத்தி வருகிறார்...

கதையுடன் நாம்(நான்) அறிந்து கொள்வது:

காதலிப்பவர்கள், வாழ்க்கையில் அடுத்து செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது.

இனிமேலாவது ECR -ல் Dating செல்லும் கூட்டம் குறையுமா என்று பார்ப்போம். அங்கே காதலர்களுக்கு நடக்கும் கொடுமையைப் பற்றி அண்ணன் ஜாக்கிசேகர் இங்கே கூறியுள்ளார்.

முழுவதும் படித்துப் பாருங்கள்... உண்மை உங்களுக்குப் புரியும்....

மொத்தத்தில் இந்தப் படம் என்னும் பல்வேறு எண்ண அலைகளை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும்.

இயக்குனர் சுசீந்திரன் அவர்களது மனதைரியம் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால் ஒரு பேட்டியில், "ஒரு இயக்குனரது உண்மையான வெற்றி அவரது இரண்டாவது படத்தில்தான் உள்ளது" என்று கூறியுள்ளார்.

இயக்குனர் சுசீந்திரன் - சரக்கு உள்ளவர்...



ஏதேதோ சொல்லனும்னு தோணுது... ரொம்ப பெருசா போகும் போல ... அதனால

நான் மகான் அல்ல - கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்திலும், பாராட்டை ஓட்டளித்தும் தெரிவிக்கவும்.

நன்றி.

நல்லவங்க...

ShareThis