May 23, 2012

ஆட்டுக்கல் [23/05/2012]


இந்த வார ஆட்டுக்கல்லில் முக்கியமாக இரண்டு விஷயங்கள் பற்றி கூற இருக்கிறேன். இன்று அரைக்கப்படும் மசாலா கார மிளகாய் சேர்க்கப்பட்டு இருக்கும் அதிக கார சாரமாகவே!!

கல்வி வியாபாரம்:

yaavarumnalam


நேற்றுதான் +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இன்னும் இரண்டு வாரங்களில் பத்தாவது தேர்வு முடிவுகளும் வந்துவிடும். +2 தேர்வு முடிவு வந்தவுடன் பிள்ளைகளும், பெற்றோரும் மதிப்பெண் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு கல்லூரியாக ஏறி இறங்க ஆரம்பித்துவிட்டார்கள். பல இடங்களில் கல்லூரியில் முன்கட்டணம் செலுத்தி பாடப்பிரிவை உறுதி செய்து கொண்டார்கள். அதுவும் எப்படி? நல்ல மதிப்பெண் எடுத்து counseling மூலம் அந்த கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால் கட்டிய பணம் free seat-க்கான கட்டணமாகக் கொள்ளப்படும். இல்லையென்றால் management quota-க்கான முன்பணமாக எடுத்துக்கொள்ளப்படும். கல்வி வியாபாரம் என்ற முள்மரத்தில் ஒரு கிளை இது.

கல்லூரிகளில் நடக்கும் வியாபாரம் முள் மரம் என்றால், அப்போ பள்ளிக்கூடங்களில் நடக்கும் வியாபாரம்? நிச்சயமாக அவற்றை முள்மரத்தின் விதைகள் என்று கூறலாம்.

நான் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எனது பனிரெண்டாம் வகுப்பை முடித்தேன். மனப்பாடம் செய்யும் எந்திரமாக நாங்கள் எங்களையே உருமாற்றிக் கொண்டிருந்த காலம் அது. (ஒரு சிலர் கணக்கு பாடத்தையே மனப்பாடம் செய்யும் அளவிற்கு நிலை முற்றிப் போயிருந்தது.)

நான் படித்த அந்த பள்ளி, இன்று அருகாமை இடங்களிலேயே தனது கிளைகளை பரப்பி கல்வி வியாபாரத்தில் நன்றாக வேரூன்றிவிட்டது. அதுவும் கவர்ச்சிகரமான பெயர்களுடன். இதுபோலதான் நாமக்கல் மாவட்டத்தில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் இன்று மதிப்பெண் தொழிற்சாலைகளாக உருவெடுத்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் 10,+2 தேர்வு முடிவுகள் வரும்பொழுது நாமக்கல் மாவட்டம் குறைந்தது தலா இரண்டு இடங்களாவது பெற்றுவிடும்.
கடந்த பத்து வருடங்களில் கல்வி வியாபாரத்தின் தலைநகராக நாமக்கல் மாவட்டம் உருவெடுத்துள்ளது என்றால் அது மிகையில்லை. அதாவது விஷ விதைகளை உருவாக்கத்தில் நாமக்கல் மாவட்டம் தற்போது முன்னிலையில் உள்ளது.

இவையெல்லாம் களைய அரசு ஒன்றே ஒன்று செய்தால் போதும். சமச்சீர் கல்வியை உண்மையிலேயே சமச்சீராக செய்து, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினாலே இந்த தனியார் கல்வி வியாபாரிகளின் கொட்டம் தானாக கட்டுக்குள் வந்துவிடும்.

பெட்ரோல் வியாபாரம்:எனக்கு விபரம் தெரிந்து நான் வண்டிக்கு பெட்ரோல் போடும்போது அதன் விலை லிட்டருக்கு 25 ரூபாய். அப்போதெல்லாம் விலையேற்றம் பைசா அளவிலேயே இருக்கும். அதனால் நம் அன்றாட வாழ்க்கையில் பெரிதாக ஏதும் பாதிக்கவில்லை. என்றைக்கு பெட்ரோல் விலையேற்றம் பைசாவிலிருந்து ரூபாய்க்கு தாவியாதோ அன்றிலிருந்தே நமக்கு ஏழரை துவங்கிவிட்டது. இந்த விலை ஏற்றத்திற்கு எண்ணை நிறுவனங்களும், அரசாங்கமும் சொல்லும் காரணம் 'நஷ்டம்'.

அந்த நஷ்டக் கணக்கை நீங்களே பாருங்கள்.வருமானம் அதிகமானால் அவர்கள் அகராதியில் நஷ்டம் என்று அர்த்தம் போல.

சரி!! இந்த பெட்ரோல் வியாபாரிகளை எத்தனை நாள்தான் திட்டுவது என்று சலித்து சகித்து திரும்பினால், எங்களை திட்டுங்கள் என்று பெட்ரோல் பங்க் முதலாளிகள் முன்னால் வந்து நிற்கிறார்கள். அவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் அப்படி..!!

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 54 பைசா ஏறிவிட்டது.

விலையேற்றம் அறிவிப்பு வந்தவுடன் பெட்ரோல் பங்க் முதலாளிகள் செய்த முதல் காரியம் பங்கை இழுத்து மூடியதுதான். இன்னைக்குதான் அனைத்து வண்டிகளிலும் ஒருசேர பெட்ரோல் காலியானது போல, திறந்திருந்த ஒரு சில பங்குகளில் அவ்வளவு கூட்டம். இரவு 10 மணிக்கு மேலும் பங்க் இருக்கும் இடங்களில் வாகன நெரிசல்.

ஏண்டா!! இப்படி அநியாயம் பண்றீங்க? இப்படி சம்பாதிக்கிற பணம் உங்களுக்கு செரிக்குமாடா? நொன்னைகளா!! நீங்க பண்ணின இந்த வேலைக்கு வாயில நல்லா அசிங்கம் அசிங்கமா வருது. நாகரீகம் கருதி இதோட நிறுத்திக்கிறேன்.

ஏதோ!! இன்னைக்கே குறைஞ்ச காசுல போடுற பெட்ரோல்-ல ஒரு வருஷம் முழுக்க வண்டி ஒட்டுராப்ப்ல அவசரப்பட்டு வாகன நெரிசலை ஏற்படுத்தும் பொது மக்களே!!! நீங்க இப்படி ஒண்ணு சேர்ந்து நிக்க வேண்டிய இடமே வேற..!!!

இப்படியே இருந்தோம்னா நாம உருப்படியா ஒரு ____ம் புடுங்க முடியாது.

எல்லோரும் நல்லா இருங்க..!!!!

யாவரும் நலம்!!

2 comments:

 1. தம்பீ!
  பதிவு நன்று!தெளிவானது, தேவையானது
  ஐயமில்லை!
  ஆனால் அந்த இறுதி வாக்கியம்....?
  தேவையா..?


  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. ஐயா!! தங்களின் கருத்துக்கு நன்றி!!

   அந்த இறுதி வாக்கியம், தொடர்ந்து சந்தித்து வரும் வெறுப்புகளின் வெளிப்பாடுதான் அது. தங்களுக்கு அசௌகரியத்தை அளித்தமைக்கு என்னை மன்னிக்கவும். திருத்திவிடுகிறேன்.

   Delete

நல்லவங்க...

ShareThis