September 01, 2010

நான் மகான் அல்ல?

4 comments:


என்னை இப்படம் பார்க்கத் தூண்டிய காரணங்கள்  காரணம்:

வெண்ணிலா கபடிக் குழு (இயக்குனர் என்று சொல்லவும் வேண்டுமா?)

படத்தின் சிறப்பம்சம்:
1. திரைக்கதை,
2. ஒவ்வொரு காட்சியிலும் மறைந்திருக்கும் குட்டிக் கதைகள்,
3. நான்கு மனம் பிறழ்ந்த மாணவர்களின்  தேர்வு,
4. கதையின் ஊடே கடந்து செல்லும் மெல்லிய நகைச்சுவை,
5. கதாபத்திரங்கள்,
6. வசனம்.
7. அப்பா-மகன்-அம்மா பழகும் விதம்...

  இது போதுங்க... இன்னமும் வரிசைபடுத்தனும்னா மொத்த கதையையும் சொல்லணும். அதனால அடுத்தத பாப்போம்.

படத்துல இசை எப்படி?

யுவன் ஷங்கர் ராஜா..

பாடல்களில் இப்போதும் மனதில் இருப்பது... "நிலவை பிடிச்சி தரவா" பாடல். குடும்ப குதூகலத்தை இசையிலும், காட்சியிலும் சொன்ன பாடல்,

அப்பா சோகப் பாடல்... காட்சிபடுத்தியிருந்த விதம் மிகவும் பாதித்தது.

பின்னணி இசை... ரகளை.. அதுவும் அந்த வில்லன்களை காட்டும்போது, அவர்களின் குரூரப் பார்வையுடன், பின்னணி இசையும் சேர்ந்து காட்சியின் தீவிரத்தை கூட்டுகிறது...

குத்து வசனம்????

இங்கதாங்க இயக்குனர் (வசனகர்த்தாவும்) தப்பு பண்ணிட்டார்... குத்து வசனம் வைக்க எவ்வளவு நல்ல கதை... ஆனால் எங்கேயும் ஒரு கூடுதல் வசனம் கூட இல்லை.

கொறைஞ்சது ஒரு காட்சியில், "அப்பாவை கொன்னவனை ஏன்டா போலீஸ்-ல சொல்லல?" அப்படின்னு நண்பன் கேக்கும்போது... நம்ம நாயகன் என்ன பேசியிருக்கனும்... "போலீஸ்-ல சொல்லிட்டு கோர்ட் தண்டனை வாங்கி கொடுக்க நான் பனிமலை இல்லைடா... எரிமலை..." அப்படின்னாவது பேசியிருக்க வேண்டாம்? ம்ஹூம்.
சரி... எரிமலை வேண்டாங்க... பரங்கிமலைனாவது  சொல்லியிருக்கலாம்ங்க...
(ஐயோ! எனக்கு என்னாச்சு... அப்பவே வீட்ல சொன்னங்க.. விஜய் படமும் அஜித் படமும் மாத்தி மாத்திப் பாக்கதடா... எதாச்சும் ஆகிடும்னு... உண்மையில எதோ ஆகிடுச்சி போலிருக்கே!!! இல்லனா குத்து வசனம் இல்லன்னு இப்படி வருத்தப்படுவனா?)

அடிதடி? (சண்டைகாட்சிக்குதான் இப்படி பேர் வெச்சிருக்கேன். நல்லாயிருக்கா?)

கலவர காட்சி மிகவும் இயல்பாக உருவாக்கப் பட்டுள்ளது,
இறுதி சண்டை மிகவும் நீளம் என்றாலும், ஒருவன் நாலு பேரை சமாளிக்கும்போது இவ்வளவு நேரம் போராட வேண்டியிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த சண்டைக் காட்சியில்தான் ஹீரோ கார்த்தி தெரிகிறார்... அதற்கு முன்பு வரை அவர் நம்மில் ஒருவராகத்தான் படம் நெடுக வருகிறார்...

நாயகி?
காஜல் அகர்வால் இருக்கிறார்...அவ்வளவுதான்... ஒரே ஆறுதல்.. முழுக்க உடுத்தி வருகிறார்...

கதையுடன் நாம்(நான்) அறிந்து கொள்வது:

காதலிப்பவர்கள், வாழ்க்கையில் அடுத்து செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது.

இனிமேலாவது ECR -ல் Dating செல்லும் கூட்டம் குறையுமா என்று பார்ப்போம். அங்கே காதலர்களுக்கு நடக்கும் கொடுமையைப் பற்றி அண்ணன் ஜாக்கிசேகர் இங்கே கூறியுள்ளார்.

முழுவதும் படித்துப் பாருங்கள்... உண்மை உங்களுக்குப் புரியும்....

மொத்தத்தில் இந்தப் படம் என்னும் பல்வேறு எண்ண அலைகளை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும்.

இயக்குனர் சுசீந்திரன் அவர்களது மனதைரியம் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால் ஒரு பேட்டியில், "ஒரு இயக்குனரது உண்மையான வெற்றி அவரது இரண்டாவது படத்தில்தான் உள்ளது" என்று கூறியுள்ளார்.

இயக்குனர் சுசீந்திரன் - சரக்கு உள்ளவர்...ஏதேதோ சொல்லனும்னு தோணுது... ரொம்ப பெருசா போகும் போல ... அதனால

நான் மகான் அல்ல - கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்திலும், பாராட்டை ஓட்டளித்தும் தெரிவிக்கவும்.

நன்றி.

August 28, 2010

நண்பனுடன் "செல்"லமாக...

1 comment:
சில வருடங்கள் தொடர்பு விட்டுபோயிருந்த நண்பர்களுக்குள்நடந்த SMS விளையாட்டு.

இரண்டு பேர். அருண், விஷ்வா என்று வைத்துக் கொள்ளுங்களேன். பிரிந்த சில மாதங்களில் விஷ்வா தனது செல்பேசியில்  இருந்த அருண் எண்ணை அழித்து விட்டான். அந்த எண்ணை மறந்தும் விட்டான்...

அருணிடமிருந்து ஒரு நாள் SMS.

  How are you machi?

விஷ்வாவிடம்தான் அருணின் எண் இல்லையே... ஏதோ புதிய எண் என்று நினைத்து அவன் அனுப்பிய பதில்.

Who are you?

உடனே அருண்....

Athu who are you illa machi.... How are you?


இதில் இருந்த வார்த்தை விளையாட்டு என்னை மிகவும் ஈர்த்தது... கூடவே அருணின் நட்பும்....


எங்கே.....   உங்கள் நட்பை பின்னூட்டத்திலும், ஓட்டுகள் அளித்தும் காட்டுங்கள் பார்க்கலாம்...

August 22, 2010

இனிது இனிது .... இனிதானதா?

5 comments:

என்னை இப்படம் பார்க்கத் தூண்டிய காரணங்கள்:
 1.  பிரகாஷ் ராஜ்,
 2. படத்தின் விளம்பரம்.

  + காரணங்கள்:

  "இல்லை"
  1. நாயகன் ஒரே அடியில் ஒரு ஊரையே துவம்சம் செய்யவில்லை,
  2. உண்மையில் இப்படத்தில் நாயகன், நாயகி என்று யாருமே இல்லை,
  3. நமது தாத்தாக்கள் யாரும் டூயட் பாடவில்லை,
  4. காமெடி செய்கிறேன் என்று யாரும் கழுத்தறுக்கவில்லை,
  5. டாட்டா சுமோக்கள் வானத்தில் பறக்கவில்லை,
  6. யாரும் நொடிக்கு 4 குத்து வசனம் பேசவில்லை,
  7. எவரும் கருத்து திணிக்கவில்லை.

  "ஆம்"
  1. அனைவருமே புது முகங்கள், அதிலும் நண்பர்களாக வரும் அனைவரும் மிக இயல்பாக உள்ளனர்,
  2. ஒளிப்பதிவு,
  3. இயல்பான நகைச்சுவை,
  4. முடிவு தெரிந்தாலும் பரபரப்பாக இருக்கும் அந்த கிரிக்கெட் போட்டி,
  5. இறுதியில் பால் பாண்டி பேசும் வசனம்.

   - காரணங்கள்:
  1. அனைத்து கதாபாத்திரங்களும் நன்கு வசதியாக, மேல்தட்டு மக்களாகவே உள்ளனர்,
  2. இசை,
  3. கல்லூரியை மையமாகக் கொண்ட படங்களில் வருவது போல, கண்ணீர் மல்க farewell பாடல் பாடுவது,
  4. இருவர் சண்டை போட்டால் உடனே ஒரு சோகப் பாடல் வருவது,
  5. Seniors-ல் சிலர் அர்ஜுன் பட வில்லன் போல் இருப்பது,
  6. கல்லூரி படம் என்றால் அனைவரும் காதலில் விழ வேண்டும் என்று 1001 -ம் முறையாக சொல்லியிருப்பது,
  7. அழுத்தம் இல்லாத முடிவு.

   ஆனாலும் எந்த இரைச்சலும் இல்லாத, குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக பார்க்க வேண்டுமா?

   கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்....

   இனிது இனிது.....பாதி

   August 20, 2010

   என்று தணியும் இவர்கள் தாகம்.....

   1 comment:
   .
   .
   .
   .
   .
   .
   .


   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .

   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .   இதற்க்கு மேல் என்ன சொல்ல? நீங்கதான் பின்னூட்டத்தில சொல்லணும்....

   June 21, 2010

   ஐ.டி. துறை வல்லுனர்களே.... உங்கள் கவனத்திற்கு...

   No comments:
   அடுக்கு மாடி அலுவலகங்களில் வேலை செய்யும் நண்பர்களே!!!!


   நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் கீழே உள்ள இணைப்பில் உள்ளது....

   தயவு செய்து படியுங்கள்.... உண்மையை உணர்ந்துக்கொள்ளுங்கள்....


   http://jackiesekar.blogspot.com/2010/06/blog-post_21.html

   June 20, 2010

   நமது நாடு எங்கே போகிறது?

   No comments:
   நண்பர்களே!!! நான் படித்த பதிவுகளில் சமீபத்தில் என்னை மிகவும் பாதித்தது இக்கட்டுரைதான்..... அதற்கான இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்..


   http://vijayarmstrongcinematographer.blogspot.com/2010/06/blog-post.html

   March 10, 2010

   இது எந்த ஊர்? நம்ம ஊர்....

   No comments:

   நமது ஊர் பெயர்கள் பலவற்றில் பார்த்தோமானால், தமிழில் ஒரு உச்சரிப்பும், மற்ற மொழிகளில் ஒரு உச்சரிப்பும் கொண்டிருக்கும். ஒரு ஊரின் பெயர் அந்த வட்டார மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறதோ, அதே உச்சரிப்போடுதான் மற்ற மொழிகளில் அழைக்கப்பட வேண்டும், எழுதப்பட வேண்டும். [உதாரணம்: தருமபுரி என்ற பெயரை ஆங்கிலத்தில் Dharmapuri எனவும், இந்தியில் धरमपुरी எனவும் எழுதலாம். இதனால் இந்த ஊர் பெயரின் ஆதார நாதம் இந்த இரு மொழியிலும் இருப்பதை காணலாம்.]

    ஆனால் இன்றைய நிலையில் பல ஊர்களின் பெயர்கள் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை. எழும்பூர் – Egmore எனவும், திருச்சி–Trichy எனவும்,  குற்றாலம் –  Courtallam எனவும் இன்னும் பல ஊர்கள் பலவாறு அழைக்கப்படுகின்றன. இதன் காரணங்களை சற்று ஆழமாக பார்ப்போமா?

    எழும்பூர்:  நமது தமிழ் மொழியின் அழகே "ழ" தான். இதைதான் வைரமுத்து ஒரு பாடலில் "தமிழுக்கு அழகு" என்று எழுதினார். ஆனால் இந்த பாழாய்ப்போன வெள்ளைக்காரனுக்கு "ழ"கரம்  சொல்ல வரவில்லை. நாக்கு நன்று மடங்கினால்தானே தமிழ் பழகும். நுனி நாக்கினால் மட்டுமே பேசிப் பழகியவனால் எழும்பூர் என்று சொல்ல வரவில்லை. அதனால் அவனது  சவுகரியத்திற்கு ஏற்ப எழும்பூரை Egmore ஆக்கிவிட்டான். நாமும் பழக்கத்திலும், ஆங்கில மோகத்திலும் "Egmore" கூறி வருகிறோம்.

   திருச்சிராப்பள்ளி: இது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது (Source : Wikipedia). சோழர்கள் தங்கள் நாட்டையிழந்து, பல்லவர்களின் ஆட்சி தஞ்சை வரை விரிந்திருந்த  காலம் (ஏறக்குறைய 12ம் நூற்றாண்டு). குறுநில மன்னனாகிவிட்டிருந்த சோழன் தனது பலத்தைக் காட்ட சிராப்பள்ளி மலையில் புலிக்கொடி ஏற்றி தனது பலத்தைக் காட்ட முனைந்தான் என்பது வரலாறு. (பார்த்திபன் கனவு - கல்கி). இத்தகைய பெருமை கொண்ட சிராப்பள்ளி, பின்பு மரியாதை (விஜயகாந்தின் மரியாதை அல்ல) சேர்க்கும் விதமாக திருச்சிராப்பள்ளி என்றானது. அதுவும் வழக்கு மொழிக்காக சுருங்கி திருச்சி ஆனது. இதுவரை சரி. ஆனால் நாக்கு மடங்காதவன் Trichy என்று சொல்லி வைத்துப் போனால் நாமும் அதையே தொடர வேண்டுமா???

   குற்றாலம்: பெயரை சொன்னாலே சில்லென்ற காற்றையும், முகத்தில் சாரலையும் உணர  வைக்கும் பெயர். இன்று நமது சொல்வழக்கில் இல்லையென்றாலும் அந்த ஊர் முழுக்க பெயர் பலகைகளில் Courtallam என்று இருப்பது ஏன்?

   இவைபோல இன்னும் பல ஊர்கள், வேறு வேறு வடிவங்களில் , பெயர்களில் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும். இவற்றில் நமது பேச்சு வழக்கில் மருவி வந்தவற்றை விட்டுவிடுவோம். ஏனென்றால் அவை நமது மக்களின் அன்றாட வாழ்வு முறையுடனும், உணர்வுடனும் இரண்டற கலந்தவை.

   இவ்வாறு நமது ஊர் பெயர்கள் இருக்கிறதே. இவை மீண்டும் நமது தமிழ் பெயர்கள் வழக்கிற்கு வர என்ன செய்யலாம். ரொம்ப சுலபம். நாம் அந்தந்த ஊரின் உண்மையான தமிழ் பெயர்களை அடையாளம் கண்டு அவற்றை நமது பேச்சு வழக்கில் கொண்டுவரவேண்டும். வாய்பேச்சில் பரவாத செய்தியும் உண்டோ நமது தமிழகத்தில்?? அவ்வாறு பயன்படுத்தினால் நாம் இதுவரை தொலைத்தவற்றை மீண்டும் அன்றாட வாழ்வில் அனைவரது பயன்பாட்டுக்கு வந்துவிடும்.       இனி Egmore என்று குறிப்பிடாமல் எழும்பூர் என்றே அனைவரும் சொன்னால், காலப்போக்கில் Egmore மறைந்து எழும்பூர் நிலைத்துவிடும். அதுவே அரசுப் பதிவேட்டில் நிரந்தர பதிவாகிவிடும்.

   செய்வோமா???

    

   January 01, 2010

   நல்லவங்க...

   ShareThis