August 22, 2010

இனிது இனிது .... இனிதானதா?


என்னை இப்படம் பார்க்கத் தூண்டிய காரணங்கள்:
 1.  பிரகாஷ் ராஜ்,
 2. படத்தின் விளம்பரம்.

  + காரணங்கள்:

  "இல்லை"
  1. நாயகன் ஒரே அடியில் ஒரு ஊரையே துவம்சம் செய்யவில்லை,
  2. உண்மையில் இப்படத்தில் நாயகன், நாயகி என்று யாருமே இல்லை,
  3. நமது தாத்தாக்கள் யாரும் டூயட் பாடவில்லை,
  4. காமெடி செய்கிறேன் என்று யாரும் கழுத்தறுக்கவில்லை,
  5. டாட்டா சுமோக்கள் வானத்தில் பறக்கவில்லை,
  6. யாரும் நொடிக்கு 4 குத்து வசனம் பேசவில்லை,
  7. எவரும் கருத்து திணிக்கவில்லை.

  "ஆம்"
  1. அனைவருமே புது முகங்கள், அதிலும் நண்பர்களாக வரும் அனைவரும் மிக இயல்பாக உள்ளனர்,
  2. ஒளிப்பதிவு,
  3. இயல்பான நகைச்சுவை,
  4. முடிவு தெரிந்தாலும் பரபரப்பாக இருக்கும் அந்த கிரிக்கெட் போட்டி,
  5. இறுதியில் பால் பாண்டி பேசும் வசனம்.

   - காரணங்கள்:
  1. அனைத்து கதாபாத்திரங்களும் நன்கு வசதியாக, மேல்தட்டு மக்களாகவே உள்ளனர்,
  2. இசை,
  3. கல்லூரியை மையமாகக் கொண்ட படங்களில் வருவது போல, கண்ணீர் மல்க farewell பாடல் பாடுவது,
  4. இருவர் சண்டை போட்டால் உடனே ஒரு சோகப் பாடல் வருவது,
  5. Seniors-ல் சிலர் அர்ஜுன் பட வில்லன் போல் இருப்பது,
  6. கல்லூரி படம் என்றால் அனைவரும் காதலில் விழ வேண்டும் என்று 1001 -ம் முறையாக சொல்லியிருப்பது,
  7. அழுத்தம் இல்லாத முடிவு.

   ஆனாலும் எந்த இரைச்சலும் இல்லாத, குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக பார்க்க வேண்டுமா?

   கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்....

   இனிது இனிது.....பாதி

   5 comments:

   1. Inidhu Inithu is the remake of telugu Happy Days movie.. The movie was good in telugu. Want to watch in tamil too..

    ReplyDelete
   2. ஏ சென்டர் - 60
    பி சென்டர் - 50
    சி சென்டர் - 40
    மொத்த மதிப்பு+எண் : 50
    (60+50+40/3) = 50)

    ReplyDelete
   3. வித்யாசமான முறையில் பதிவு போடுறிக்கீங்க...!பதிவுலகத்துக்கு நான் புதியவன்.நம்ம பக்கத்துக்கு கொஞ்சம் வாங்க..பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...!
    http://vetripages.blogspot.com/

    ReplyDelete
   4. //வித்யாசமான முறையில் பதிவு போடுறிக்கீங்க...!பதிவுலகத்துக்கு நான் புதியவன்.நம்ம பக்கத்துக்கு கொஞ்சம் வாங்க..பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை சுட்டிக்காட்டுங்கள்..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்//
    உங்களுக்கு என்ன தோணுதோ அதை எழுதித்தள்ளுங்க...
    அதுக்கு பேரு தான் blog. (not block)

    ReplyDelete

   நல்லவங்க...

   ShareThis