May 14, 2011

அழகர்சாமியின் குதிரை - பட விமர்சனம்

அப்பாடா... இந்த மாதிரி படம் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு???
கண்ணே! மணியே!! என்ற வசனங்கள் இல்லாமல் கண்களாலேயே பேசும் காதல்.. ம்ம்ம் இதுவும் நல்லா இருக்கு....
 
திருவிழாவின்போதும், பஞ்சாயத்து கூட்டத்தின்போதும், காதலி அத்வைதாவை அவள் காதலன் பிரபாகர் தனியே அழைக்கும்போது, "நீ போ!! நான் வர்றேன்" என்று கண்களில் காட்டும் அபிநயம் மிக அருமை. படத்தின் மிகச் சிறந்த காட்சிகளில் இதுவும் ஒன்று.
தமிழ் சினிமாவின் மிகப் பெரிய இளைப்பாறுதல் இந்தப் படம்...
ஆனா!! கதை 1982-ல் நடக்குது... மலை கிராமத்தை சேர்ந்த பெண்கள், புருவம் ஒதுக்கி தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் அளவுக்கு அன்று நாகரிகம் பரவியிருந்ததா?? படத்தில் இந்த இரு நாயகியரின் முகமும் ஏனோ படத்தை விட்டு விலகியிருப்பது போல் தோன்றியது....
பாடல் வெளியீட்டின்போது, அப்புக்குட்டியைப் பற்றி, இளையராஜா கூறியது," உன்னால சூப்பர் ஸ்டார் ஆக முடியாது, சூப்பர் ஸ்டாரால் கூட உன்னை மாதிரி நடிக்க முடியாது". ஏதோ உள்குத்தோடு இளையராஜா பேசியதாக அப்போது விவாதிக்கப்பட்டது.. ஆனால் படத்தை பாருங்கள். இளையராஜா அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை.

[நம்ம சூப்பர் ஸ்டார்தான் இந்த மாதிரி படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாரே!!!!! உலகநாயகனோ வாய் வலிக்க பாராட்டுவார். ஆனால் மீண்டும் மீண்டும் மன்மதன் அம்பு என்று அரைச்ச மாவு கூட  இல்லாமல், வெறும் உரலை ஆட்டிக்கொண்டிருக்கிறார். மகாநதி, அன்பே சிவம் தவிர்த்து அவர் இன்னும் எந்த 'கதையிலும்' அவர் நடிக்கவில்லை. இதை பற்றி தனியாவே ஒரு கட்டுரை எழுதனும்...]
கதை இல்லை, கதை இல்லைன்னு கூவும் இயக்குனர் பெருமக்களே!! நம் வாழ்க்கையிலேயே எவ்வளவோ கதை இருக்கு.. அதை நம்ம சுசீந்திரன் மாதிரி வாழ்க்கையோடு கலந்து எடுங்கப்பா... நம்ம தமிழ் சினிமா ராஜ பவனி வரும்...
 
படத்துக்கு தனியா போகாம, இந்த மாதிரி கூட்டமா போங்க.... குடும்பத்தோட பாக்க அருமையான திரைப்படம்... தனிப்பட்ட நாயகன், நாயகி, அச்சு பிச்சு கிராபிக்ஸ், மொக்க காமெடி, எதுவும் இல்லாமல் ஒரு சிறுதையை அப்படியே படித்த உணர்வை ஏற்படுத்துகிறது இந்தப் படம்.
 நாம எல்லோரும் இந்த படத்துக்கு, இப்படித்தான் ஆதரவு குடுக்கனும்.... சரியா???





3 comments:

  1. நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி. சில படங்கள் ஏன் எடுக்கறாங்கன்னே தெரியமாட்டேங்குது. நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. விரைவில் பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  2. கண்ணே! மணியே!! என்ற வசனங்கள் இல்லாமல் கண்களாலேயே பேசும் காதல்.. ம்ம்ம் இதுவும் நல்லா இருக்கு...

    ReplyDelete
  3. superb film in 2011

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis