May 17, 2011

பழைய சோறும்... சின்ன வெங்காயமும்....

தினமும் கொளுத்தற வெயில சமாளிக்க நாம என்னென்னமோ செய்றோம்... ஆனா நம்ம வீட்டு பெரியவங்க, மூதாதையர்கள் கடைபிடிச்சுக்கிட்டு வந்ததை நாம மறந்து போனதால இன்னைக்கு அவதிப்படறோம். அதாவது  கால ஓட்டத்தில் மறந்து போய்ட்டோம்...

இப்போ நான் சொல்லப்போறது, நம்ம வீட்லயே நாம சுலபமா செய்து சாப்பிடலாம்..

அதற்கு தேவையானவை:

1) இரவு மீதியான சோறு.


 2) சின்ன வெங்காயம் (அ) பச்சை மிளகாய்.


செய்முறை:

இதுல ஒன்னும் பெரிய வேலையெல்லாம் இல்லீங்க....

இரவு மீதியான சோறு இருக்குல்ல!! அதை ஒரு பாத்திரத்தில் போட்டு (மண்பானை இன்னும் சிறந்தது),சோறு மூழ்கும் அளவுக்கு குடிநீரை ஊத்தி வைச்சுடுங்க.. பாத்திரத்தை மூட மறந்துடாதீங்க!!!!

காலைல அதை பாத்தீங்கன்னா, சோறும், நீரும்  ஊறி இருக்கும்... அவ்வளவுதாங்க!! நம்ம உணவு தயார்.

அந்த சோற்றில் சிறிது உப்பு சேர்த்து, நன்றாக பிசைந்து, ஒரு குவளைல ஊத்திக்கோங்க... சின்ன வெங்காயம் இல்லன்னா பச்சை மிளகாய் பக்கத்துல தயாரா இருக்கா?

இப்போ சோறை கொஞ்சம் குடிங்க.... வெங்காயத்தைக் கொஞ்சம் கடிங்க....

அடடடா!!! சோத்துநீரின் குளிர்ச்சியும், வெங்காயத்தின் காரமும் ஒருசேர தொண்டையில் இறங்கும்போது அந்த ருசி, எந்த சாப்பாட்டுக் கடையிலயும் கிடைக்காதுங்க... இந்த நீர் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்...

ஊர் பககம் பாத்தீஙகன்னா.. நாள் முழுக்க வெயில்ல வேலை செய்றவங்க காலைல இந்த நீரைக் குடிச்சிட்டு வேலைக்குப் போவாங்க... அவ்வளவு அருமையானது இந்த நீர்...

அந்த சோறு ஊறிய நீரை, எங்க ஊர் வட்டார வழக்குல "நீச்சத்தண்ணி"ன்னு சொல்லுவோம்!!!

இதுல என்ன நன்மைன்னா, நம்ம வயித்துல இரவு தூங்கும்போது நிறைய அமிலங்கள் உருவாகியிருக்கும்.. காலை எழுந்தவுடன் சூடா எந்த உணவு சாப்பிட்டாலும் அது நம் உடலுக்கு கேடுதான்... அதற்கு பதிலா இந்த நீராகாரத்தை சாப்பிட்டோம்னா, உடலுக்கு எந்தக் கேடும் கிடையாது...

இதை உங்களால தயார் செய்ய முடியலையா?  காலைல எழுந்தவுடன் பல் விளக்கிட்டு வயிறு நிரைய தண்ணீர் குடிங்க...

ஆரோக்கியத்தோட இருங்க!!!





4 comments:

  1. ஆஹா என்ன அற்புதம் பல வருடங்களுக்கு முன்பு மீண்டும் என்னை அழைத்து சென்றது இந்தப் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  2. நினைக்கும்போதே வயிறு குளிர்ந்துபோகுது. அதில் இரண்டு உப்புக்கல் போட மறந்திடாதீங்க.

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி கீதா!!!

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis