November 08, 2011

ஆட்டுக்கல் [8/11/2011]

எனக்கு அவ்வப்போது தோன்றும் சின்ன சின்ன எண்ணங்களை இந்த ‘ஆட்டுக்கல்’ பகுதியில் கொடுக்க இருக்கிறேன். இப்போதைக்கு சில எண்ணங்களோடு ஆரம்பிக்கப்படும் இந்தப் பகுதி போகப் போக தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும்.

‘ஆட்டுக்கல்’ விளக்கம் தேவைப்படுவோர்க்கு: கிரைண்டர் வரும் முன்னர் பரவலாக பயன்பட்ட சாதனம்தான் ஆட்டுக்கல். இட்லி, தோசை, பணியாரம், வடை என பலதரப்பட்ட பலகாரங்களுக்கு மாவு அரைக்க பயன்பட்டது.

இங்கும் பல சுவைகளில் செய்திகள் அலசப்படுவதால் இந்தப்பகுதிக்கு ‘ஆட்டுக்கல்’ என்ற பெயர்.

இனி.......
===========================================================================================================
அனுபவம்:

திரை அரங்கில் காலம் தாழ்த்தி வந்து காலை மிதித்துச் சென்று ‘சாரி’ சொல்கிறார்கள். படம் முடிவதற்கு முன்னாலே எழுந்து செல்ல முனைந்து திரையை மறைக்கிறார்கள். # ஏம்ப்பா!!! நீங்க படம் பாக்கத்தானே வர்றீங்க?
 
===========================================================================================================

அரசியல்:

புதிய தலைமைச் செயலகம் – அரசு பொது மருத்துவமனை,

அண்ணா நூலகம் – குழந்தைகள் மருத்துவமனை,

அடுத்தது என்ன செம்மொழிப் பூங்காவா? ஆமா இந்தப் பூங்காவை என்னவா மாத்தப் போறீங்க?

கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக இப்படி எல்லாத்தையும் இந்தம்மா மாத்த ஆரம்பிச்சிட்டாங்களே!!! இதுக்கா எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிச்சார்?
 
ஒரு நிமிடம்: குமரியில் இருக்கும் வள்ளுவர் சிலையும் கருணாநிதியால் நிருவப்பட்டதுதானே!! அப்போ வள்ளுவரை இந்தம்மா என்னவா மாத்துவாங்க? ஒரு கற்பனை.....

[யாரும் திட்டாதீங்கோ!! இது சும்மா தமாசுக்கு...]
 
===========================================================================================================
 
கோபம்:

புதிய தலைமைச் செயலகத்தை அப்போ எதுக்கு இவ்ளோ செலவு செஞ்சு கட்டினாங்கன்னும் தெரியல....

இப்போ அது ஏன் சும்மா கிடக்குதுன்னும் தெரியல..

இது எல்லாத்தையும் பாத்துக்கிட்டு நாம் ஏன் சும்மா இருக்கோன்னும் தெரியல...

ஆனா ஒண்ணு மட்டும் தெரியுது...

இப்போ அந்த இடத்துல Metro Train-க்காக தோண்டிக்கிட்டிருக்காங்க...

ஏண்டா!! இந்த வழியா ரயில் விடப் போறீங்கன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியாதா?

===========================================================================================================
 
நகைச்சுவை:

"என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு..",

"பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?",

"ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!"

===========================================================================================================

1 comment:

நல்லவங்க...

ShareThis